தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜீ.ஏ.சந்திரசிறியின் நியமனத்தை மீள் பரிசீலனை செய்ய கோரிக்கை

வட மாகாண ஆளுநராக ஜீ.ஏ.சந்திரசிறியை மீண்டும் நியமித்ததை மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் சட்டத்தரணிகள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது. ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் (Lawyers for Democracy) என்ற அமைப்பு ஊடகங்களுக்க விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.legal1-1000-by-420

வடபகுதி மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு சிவிலியன் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும்.  இராணுவ அதிகாரியொருவரின் இவ்வாறான நியமனம் உதவிக்கரமாக அமையாது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நியமனம் வடபகுதி மக்களின் உணர்வுகளை மதிக்காமல் காயப்படுத்தும் விடயம், இது நல்லிணக்கத்திற்கு தடையாக இருக்கும் என்றும் அவ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. மேலும், வடக்கில் இராணுவ ஆட்சி நீடிப்பதாக ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

Comments
Loading...