தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜெயலலிதாவிற்கு எதிராக போட்டியிட தயார் – குஷ்பு

kushbooமுதல்–அமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது.  அதனால் அந்த தொகுதியை விட்டுத் தரும்படி தி.மு.க.விடம் காங்கிரஸ் கட்சி வற்புறுத்தி உள்ளது.  ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்புவை நிறுத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் விரும்புகிறார்.  இதுபற்றி நடிகை குஷ்புவிடம் கேட்டபோது, கட்சி மேலிடம் விரும்பி வாய்ப்பு அளித்தால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட தயார் என்று அறிவித்துள்ளார்.

Comments
Loading...