Designed by Iniyas LTD
டிசம்பர் 4ம் தேதி ஃபிடல் காஸ்ட்ரோ இறுதிச் சடங்கு
கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்குகள் டிசம்பர் மாதம் 4ம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கியூபாவில், காஸ்ட்ரோ மறைவையொட்டி 9 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும்ட அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 90.
முன்னதாக, ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை நடைபெறும் என்று அந்நாட்டு அதிபர் ரால் காஸ்ட்ரோ தெரிவித்திருந்தார். ஆனால், மாபெரும் தலைவருக்கு உலகத் தலைவர்களும், மக்களும் அஞ்சலி செலுத்த வசதியாக, அவரது இறுதிச் சடங்குகளை டிசம்பர் 4ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.