Designed by Iniyas LTD
தமிழக தேர்தல் பாஜக பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை நியமனம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. அக்கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழக பாஜக இணைத் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் ஃபியூஸ் கோயல், நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல, கேரள மாநில பாரதிய ஜனதா தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சி பின்தங்கியுள்ள தமிழகம், கேரளாவில் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாக மத்திய அமைச்சர்கள் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.