Designed by Iniyas LTD
தமிழக மீனவர்கள் 66 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது
தமிழக மீனவர்கள் 66 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த 9ஆம் தேதியும், 30 மீனவர்கள் கடந்த 11ஆம் தேதியும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். 
கடந்த 2ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரும், 24ஆம் தேதி நாகை, பூம்புகார் மீனவர்கள் 24 பேரும் சிறைபிடிக்கப்பட்டனர். இந்நிலையில், தமிழக மீனவர்கள் 66 பேரை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், 7 படகுகள் விடுவிப்பு குறித்த வழக்கு விசாரணையை தேதி அறிவிக்காமல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.