Designed by Iniyas LTD
தமிழகத்தின் இந்திரா காந்தியாக விளங்கியவர் ஜெயலலிதா – ஈவிகேஎஸ் இளங்கோவன்
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.
ஜெயலலிதா மறைவு குறித்து முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ள கருத்து: அரசியல் ரீதியாக முதல்வர் ஜெயலலிதாவுடன் நான் கருத்து வேறுபாடு கொண்டவன். என்றாலும் கூட அவர் மீது தனிப்படட முறையில் மரியாதை, பாசம் கொண்டிருந்தேன். எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். எதற்கும் அஞ்சாதவர். சுருக்கமாக சொன்னால் தமிழகத்தின் இந்திரா காந்தியாக விளங்கியவர் ஜெயலலிதா என்று சொன்னால் மிகையாகாது.
அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நானும் அவரும் ஒரே பள்ளியில் படித்தவர். எனக்கு ஒரு வருடம் சீனியர் அவர். கொள்கை அளவில் என்னுடன் வேறுபட்டவர். இருப்பினும் வீரம் மிக்கவர். தன்னம்பிக்கையோடு திகழ்ந்தவர் என்றும் இளங்கோவன் கூறியுள்ளார்.