Designed by Iniyas LTD
தமிழகத்தில் இன்று மழை!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழை பதிவாகி வருகிறது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி ஓசூர், நத்தத்தில் தலா 6 செ.மீ. மழை அதிகபட்சமாக பதிவாகியுள்ளது. காவேரிப்பாக்கத்தில் 4 செ.மீ., சோளிங்கர், அரக்கோணத்தில் தலா 3 செ.மீ., செங்கம், மேட்டூரில் தலா 2 செ.மீ., தாம்பரம், மேலூர், வாணியம்பாடி, வாலஜா, ஊட்டியில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.