தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழகத்தில் உள்ள வரலாற்று சுவடிகளை காக்க பணம் கொடுத்து உதவிய தேசியத் தலைவர்!

ஆரம்ப காலத்தில் தமிழரின் தொன்மைகள் ஒவ்வொரு படையெடுப்பின் போதும் அழிக்கப்பட்டு தற்போது மிஞ்சியிருக்கும் ஒரு சிலவற்றினை பாதுகாப்பதற்கு தமிழக அரசு அக்கறை காட்டுவதில்லை. எமது பாரம்பரிய மருத்துவம் மற்றும் எண்கணித சாஸ்திரங்கள் போன்ற அரியவகை ஓலைச்சுவடிகள் பல தமிழகத்தை விட்டு வெகு தொலைவுக்கு சென்றுவிட்டது என்பது மிகவும் வேதனையான விடையம்.

இதற்கு காரணம் தமிழக அரசு மட்டுமே. கருணாநிதியும் சரி ஜெயலலிதாவும் சரி எமது தொன்மைகளை பாதுகாக்க முக்கியத்துவம் கொடுத்ததில்லை. இன்று கூட ஜெர்மன் நாட்டிலிருந்து தமிழகம் வரும் ஆய்வாளர்கள் பழனி போன்ற இடங்களுக்கு சென்று அங்கு ஓலைச்சுவடிகலை வெறும் ஐநூறு ஆயிரம் ரூபாக்களுக்கு வாங்கி சென்றுவிடுகின்றனர் என்பது உண்மை.

பணக்கஷ்டத்தில் இருக்கும் எமது மக்களும் அவற்றினை பணத்துக்காக விற்றுவிடுகின்றனர் என்பது மிகவும் வேதனையான விடையம். இலங்கையில் சமாதான காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்க தமிழகத்தில் இருந்து பல அறிஞர்கள் பேராசிரியர்கள் வந்து சென்றனர்.

அப்படி ஒரு முறை வந்த சில தமிழ் உணர்வாளர்கள் தலைவரிடம் எமது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுவடிகள் பணத்துக்காக விற்கப்பட்டுக் கொண்டிருப்பதை தலைவரிடம் கூறினார்கள்.

தலைவரும் அந்த சுவடிகளை எப்படியும் காக்க வேண்டும். அதனை வெளிநாட்டினருக்கு விற்க விடவேண்டாம் எனவும் மக்களுக்கு தேவையான பணத்தினை நான் தருகிறேன். நீங்கள் அவை அனைத்தையும் வாங்கி பாதுகாருங்கள் என கூறி உடனடியாக பணத்துக்கும் ஒழுங்கு படுத்தி அவர்களை அனுப்பி வைத்தார்.

ஈழத்தில் தலைவர் இருந்தபோதும் எங்கெல்லாம் தமிழர்கள் பரந்து வாழ்கின்றனரோ.அங்கெல்லாம் தமிழ் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மிகவும் கரிசனையோடு இருந்தவர்.

கிளிநொச்சியில் சகல வசதிகளோடு தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...