Designed by Iniyas LTD
‘தமிழ் மக்கள் பேரவை’ என்றும் மக்கள் இயக்கமாக மட்டுமே செயற்படும்! விக்கினேஸ்வரன் உறுதி !
தமிழ் மக்கள் பேரவையில் பல கட்சிகள் உள்ளன அவர்கள் பேரவை மூலம் இலாபம் பெறலாம் என எண்ணக்கூடும் . ஆனால் நாம் மக்கள் இயக்கமாக மட்டுமே செயல்படுவோம். என வட மாகாண முதலமைச்சரும் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
முதலமைச்சரின் அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்கால செயல்பாடுகளில் தேவை ஏற்படுன் தமிழ் மக்கள் பேரவையை ஓர் அரசியல் கட்சியாக பதிவது தொடர்பில் ஆராயப்படும் என அரசியல் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,
தமிழ் மக்கள் பேரவையில் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன அவ்வாறான கட்சிகளுக்கு அரசியல் ரீதியிலான தேவைகள் இருக்க கூடும். தமிழ் மக்கள் பேரவையின் மூலம் இலாபம் பெறலாம் என எண்ணக்கூடும் . ஆனால் பேரவை என்றுமே மக்கள் இயக்கமாக அரசியல் கலப்பிற்கே செயல்படும். அதேபோல் பேரவையின் எழுக தமிழ் நிகழ்வுகளில் பெண்களை மேடையில் ஏற்றப்படாதமை தொடர்பான விடயமானது பேரவையில் பெண்கள் இணைந்து கொள்ள பின் நின்றமையே காரணம்.
இனி வரும் காலங்களில் துணிந்த பெண்களை அழைக்கின்றோம் அவ்வாறு இணைகின்றபோது அவர்களும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். அதேநேரம் பேரவையில் இல்லாதவர்களை நாம் மேடையில் ஏற்றவில்லை. அதற்கு காரணமாகவே யாழில் இடம்பெற்ற எழுக தமிழிலும் அமைச்சர் ஐங்கரநேசனை மேடையில் ஏற்றவில்லை. என்றார்.