தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தரையிறங்கிய பின் வெடித்துச் சிதறிய SpaceX-ன் Starship விண்கலம்! சோதனை வெற்றியா., தோல்வியா?

பல சோதனைகளுக்குப் பின், SpaceX-ன் Starship SN 10 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஆளில்லாத அந்த விண்கலம் ஆகாயத்தில் சுமார் 10 கிலோமீட்டர் உயரத்துக்கு செலுத்தப்பட்டு பின்னர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

ஆனால், தரையிறங்கிய சில நிமிடங்களில் விண்கலத்தின் கீழ் பாகத்தில் தீப்பிடித்து வெடித்து சிதறியது. அதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஏற்கெனவே பல முறை சோதனை செய்ததில், விண்கலம் ஆகாயத்தில் இருக்கும்போதே தீப்பிடித்து வெடித்துள்ளது. ஆனால் இந்தமுறை, முறையாக தரையிறங்கிய சில நிமிடங்கள் கழித்தே வெடித்துள்ளது. அந்த வகையில் இந்த சோதனை முயற்சி ஒருவித வெற்றி என கருதப்படுகிறது.

இந்த நிலையில் SpaceX-ன் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “RIP SN10, Honorable Discharge” என பதிவிட்டுள்ளார்.

மெக்ஸிகோவின் எல்லைக்கு அருகில், தெற்கு டெக்சாஸில் SpaceX குத்தகைக்கு எடுத்த வெறிச்சோடிய பகுதியில் சோதனைகள் நடைபெறுகின்றன.

Comments
Loading...