Designed by Iniyas LTD
தலித் குழந்தைகள் படுகொலை: அமைச்சர் விகே சிங் கருத்துக்கு வைகோ கண்டனம்
ஹரியானா மாநிலத்தில், 2 பச்சிளம் குழந்தைகள் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தை, மனித நேயமற்ற முறையில் விமர்சித்த மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.
ஹரியானா மாநிலத்தில், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தக்குதல்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதாக தெரிவித்திருக்கிறார். தலித் மக்கள் மீதான வன்முறை வெறியாட்டங்களை அம்மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா அரசு தடுத்து நிறுத்தவில்லை என வைகோ குற்றம்சாட்டியிருக்கிறார்.
தலித் குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து, மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் அதிகார மமதையில் கருத்து தெரிவித்துள்ளதாகவும், அதற்கு தமது கண்டனத்தை அவருக்கு தெரிவித்துக் கொள்வதாகவும் வைகோ கூறியிருக்கிறார்.