தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தலைவர்கள் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மரியாதை செலுத்தினார் !

jaya1தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளது.

இதையடுத்து, சென்னையில் இன்று முக்கியத் தலைவர்களின் சிலைகளுக்கு முதல்வர் ஜெயலலிதா மரியாதை செலுத்தினார்.

முதலில், பெரியார் சிலைக்கு வந்த ஜெயலலிதா, அங்கு அவரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கிருந்து அண்ணாசாலையின் வாலாஜாசாலையில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அண்ணா திருவுருவப் படத்துக்கும் மலர் தூவி மதியாதை செலுத்தினார்.

அங்கிருந்து அண்ணாசாலை, ஸ்பென்சர் அருகே அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் ஜெயலலிதா.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வருகையை முன்னிட்டு, இன்று இப்பகுதிகள் திருவிழாக் கோலம் பூண்டிருந்தன.

Comments
Loading...