தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தா.மா.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜிகே.வாசன்

சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:–vasan

* பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும். மது ஆலைகள் மூடப்படும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுவேலை. மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைக்கப்படும். * வேலை வாய்ப்புக்கு புதிய திட்டங்கள். * தமிழகத்தில் உள்ள நதிகள் இணைக்கப்படும். * சுற்றுலா தலங்களை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். * தரமான கல்வி மற்றும் மாணவர்கள் கணினி, கைபேசி மூலமாக படித்துக் கொள்ளும் புதிய கல்வி திட்டம் செயல்படுத்தப்படும். * தொழில் கல்வி திட்டம் பள்ளியில் அமுல்படுத்தப்படும். * ஏழை மாணவர்களுக்கான கல்வி கடன் ரத்து செய்யப்படும். * பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மாவட்டம் தோறும் மகளிர் பாதுகாப்பு மையம். * கல்வி திட்டத்தில் சுதந்திர போராட்டம், தமிழகத்தின் பங்கு சேர்க்கப்படும். * மகளிர் சுயஉதவி குழு பெண்களுக்கு காப்பீட்டு திட்டத்துடன் கூடிய ஓய்வு ஊதியம் கிடைக்க உறுதி செய்வோம். * மின் மிகை மாநிலமாக உருவாக்குவோம்.

* கிராமங்களில் விவசாய தகவல்கள் அறிய விவசாய இணைய தள தகவல் மையம் அமைக்கப்படும். * விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம். விவசாய பயிர்கடன்கள் ரத்து செய்யப்படும். அவர்கள் நலனுக்காக புதிய மானியம் அறிவிக்கப்படும். * பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பால் ரூ.40 ஆக நிர்ணயிக்கப்படும். * கனிம வள கொள்ளைகள் தடுக்கப்படும். * தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினவருக்கு இட ஒதுக்கீடு கட்டாயமாக அமுல்படுத்தப்படும். * கோவில் சொத்துக்கள் பாதுகாக்கப்படும். * அனைத்து கோவில்களில் ஒரு வேளை பூஜை கட்டாயமாக்கப்படும். * மதுரை, திருச்சியில் இருந்து ஹஜ்பயணம் தொடங்கப்படும். * ஜெருஜலேம் செல்லும் கிறிஸ்தவர்களுக்கு உதவித் தொகை இரட்டிப்பாக்கப்படும். * திருக்குறள் தேசிய நூலாக்கப்படும். * சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டப்படும். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வற்புறுத்துவோம். * ரேஷன் கார்டு ‘ஸ்மார்ட்’ கார்டாக வழங்கப்படும்.

* அனைத்து கிராமங்களிலும் பொது கழிப்பிடம். * மீண்டும் சட்ட மேலவை கொண்டு வரப்படும். * மாணவ–மாணவிகளுக்கு தனி பேருந்து வசதி செய்யப்படும். * பெருநகரங்களில் அடுக்குமாடி கார் நிறுத்த அடுக்குமாடி அமைக்கப்படும். மேற்கண்ட அம்சங்கள் இடம் பெற்று உள்ளது. பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:– ஆட்சி மாற்றம் என்பது அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க. என்பது அல்ல. தூய்மையான, நேர்மையான, திறமையான மக்கள் பணியாற்றும் தலைவர்களால்தான் மாற்றத்தை தர முடியும். அதை எங்கள் கூட்டணி தலைவர்களால் நிச்சயம் தர முடியும். அ.தி.மு.க. பிரசார கூட்டங்களில் தொடர்ந்து மக்கள் பலியாவதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதிய வெயில் நேரத்தில் பிரசாரங்களை தடுக்க வேண்டும். வருகிற 23–ந்தேதி முதல் மே 6–ந்தேதி வரை முதல் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஞான தேசிகன், கோவை தங்கம், விடியல் சேகர், ஜி.ஆர்.வெங்கடேஷ், தலைமை நிலைய செயலாளர்கள் டி.எம்.பிரபாகர், டி.என்.அசோகன், மாவட்ட தலைவர்கள் இ.சி.சேகர், கொட்டிவாக்கம் முருகன், பிஜு தாட்கோ, ராஜ்குமார், தி.நகர் கோதண்டன், சவுந்தர் முருகன், அருண்குமார், சைதை மனோகரன், ஆர்.சீனிவாசன், ஜெ.ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Loading...