Designed by Iniyas LTD
தான் வைத்த பொறியில் சிக்க வேட்டையாட சென்றவர் பலி!
வெத்தகல பகுதியில், வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக பொறி துப்பாக்கியொன்றை வைத்திருந்த நபர், அதே பொறி துப்பாக்கி சுட்டதன் காரணமாக, நேற்று (18) உயிரிழந்துள்ளார்.
படுகாயங்களுக்கு உள்ளான நபர், பிரதேச வாசிகளினால், கெபெதிகொல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மொரகொடையை வசிப்பிடமாகக் கொண்ட லியோனல் ராஜபக்ஷ (வயது 39) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே, இதன்போது உயிரிழந்துள்ளார்.
இதற்கு முன்னரும், குறித்த நபர், இதேபோன்று பொறியில் சிக்கியிருந்து உயிர்பிழைத்தமை குறிப்பிடத்தக்கது.