Designed by Iniyas LTD
தியாக தீபம் திலீபனின் எட்டாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு!
தமிழினத்தின் தியாக தீபம் திலீபன் அவர்களின் 08ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், பெருமளவான தமிழ் மக்கள் சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.