தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தியாகி  திலீபனின்  நினைவிடத்தை சுற்றி  வேலி அமைத்தவர்களுக்கு அச்சுறுத்தல் ..

யாழ் நல்லூர் வீதியில் அமைந்துள்ள   தியாகி  திலீபனின்  நினைவிடத்தை சுற்றி  வேலி அமைத்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வாளர்கள் என தம்மை அமையாளப்படுத்தியோரே இவ்வாறு  அச்சுறுத்தல் விடுத்துள்ளதாளவும் தெரியவந்துள்ளது.

யாழ்.நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தைச் சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே  அவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபையால் தியாகி  திலீபனின்  நினைவிடத்தை சுற்றி வேலி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்ந்நிலையில் நேற்றையதினம் மாநகர சபை பணியாளர்கள் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையே குறித்த  பணியாளர்களை அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிபிடத்தக்கது.

 

Comments
Loading...