தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திருகோணமலை இளைஞர்கள் இருவர் வவுனியாவில் கைது…

திருகோணமலையை சேர்ந்த இரு  இளைஞர்கள்  1670 போதைவில்லைகளுடன் ஓமந்தையில்  கைது செய்யப்பட்டுள்ளதாக   தெரிவிக்கபட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை சென்ற தனியார் பேருந்தை ஓமந்தையில் பொலிஸார் சோதனை  இட்டபோதே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது  அவர்களிடமிருந்த போதை விலைகள் பொலிஸாரால்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த  இளைஞர்களிடம்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின் அவர்களை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...