Designed by Iniyas LTD
திருகோணமலையில் இருவர் கைது..
திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ரயில் தண்டவாளத்தை திருடிய இருவரை நேற்றைய தினம் கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கந்தளாய் வாத்தியாகம மற்றும் அக்போபுர பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 26 வயதுடைய இருவர் இவ்வாறு கைது செய்துசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
புதிய தண்டவாளத்திற்கு அருகில் கழற்றி வைக்கப்பட்டிருந்த பழைய தண்டவாளங்களையே குறித்த சந்தேக நபர்கள் திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
குறித்த சந்தேக நபர்கள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ட்குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபர்களை கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.