தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திருப்பூரில் ஓவியர் புகழேந்தியின் “நானும் எனது நிறமும்” நூல் வெளியீடு…

திருப்பூரில் ஓவியர் புகழேந்தியின் “நானும் எனது நிறமும்” நூல் வெளியீடு…
ஓவியர் புகழேந்தியின் ‘நானும் எனது நிறமும்’ என்ற தன் வரலாற்று நூல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெளியிடப்பட்டன. இன்னும் பல்வேறு இடங்களில் வெளியீட்டு நிகழ்வு நடைபெற திட்டமிடப் பட்டிருக்கிறது.


அந்த வகையில் திருப்பூர் நேர்மை மக்கள் இயக்கமும் பதியம் இலக்கிய அமைப்பும் இணைந்து திருப்பூரில் நடத்துகிறது.திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள காயத்ரி ஓட்டலில், 24.9.2017 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு அவர்கள் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார். சர்க்கரைத் துறை கூடுதல் இயக்குனர் மு. செந்தமிழ்ச் செல்வன் நூலைப் பெற்றுக்கொள்கிறார். பாவேந்தர் பேரவையின் செந்தலை ந.கவுதமன் நூலை அறிமுகம் செய்கிறார். ஓவியர் புகழேந்தி ஏற்புரை ஆற்றுகிறார். நேர்மை மக்கள் இயக்கத்தின் பழ.ரகுபதி தலைமை ஏற்கிறார். பதியம் இலக்கிய அமைப்பின் பாரதி வாசன் வரவேற்புரை ஆற்றுகிறார். நேர்மை மக்கள் இயக்கமும் பதியம் இலக்கிய அமைப்பும் அனைவரையும் அன்போடு அழைக்கிறது.

 

Comments
Loading...