தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தீபிகா பல்லிகல் -ஜோஸ்னா சின்னப்பா ஆகியோருக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்குகின்றார் முதல்வர்

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில், ஸ்குவாஷ் பெண்கள் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற தீபிகா பல்லிகல் மற்றும் ஜோஸ்னா சின்னப்பா ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.josna

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பாராட்டு கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளீர்கள். இதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். காமன்வெல்த் போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டில் இந்தியா முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்றுள்ளது என்பதை அறிகிறேன். இதன் மூலம் நீங்கள் இருவரும் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்து உள்ளீர்கள்.

காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு வழங்கப்படும் பரிசு தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தி 2011–ம் ஆண்டு டிசம்பரில் உத்தரவிட்டேன் என்பது உங்களுக்கு தெரியும். தற்போது இந்த பரிசு தொகையை தங்களுக்கு அளிப்பதில் பெருமை படுகிறேன்.

உங்களது வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நான் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை படைத்து தமிழகத்துக்கும், இந்தியாவிற்கும் புகழ் சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு பாராட்டு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...