Designed by Iniyas LTD
தெரிவுக்குழு விடயத்தில் ஜனாதிபதி தலையிட முடியாது – மாவை சேனாதிராஜா தெரிவிப்பு
கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு முறையற்ற செயற்பாடுகளின் விளைவாகவே தற்போதைய நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது. அவை பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளின் ஊடாக வெளிப்படுத்தப்படும் போது அதனைத் தடுப்பதற்கு முயற்சிப்பதை ஏற்கமுடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி சிறிசேன, பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடருமானால் என்னுடனான பயணத்திலிருந்து விலகுங்கள் அல்லது என்னை விலக்கி விடுங்கள் என்று கடுந்தொனியில் எச்சரித்திருக்கிறார். தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்கு எதிரான ஜனாதிபதியின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராஜா, பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் சபாநாயகரே தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.