Designed by Iniyas LTD
தேசிய உடற்தகுதி வாரம் ஸ்ரீலங்கா அரசால் அறிவிப்பு!
தேசிய விளையாட்டு மற்றும் உடல்தகுதி வாரமாக ஜனவரி 25 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையான வாரத்தை அறிவிக்க அரசு முடிவுசெய்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த 28 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் அமைச்சின் செயலாளர் திசநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஏற்படுத்தவும் நாட்டில் விளையாட்டு கலாசாரத்தை உருவாக்க மக்கள் மத்தியில் விளையாட்டினை பிரபலப்படுத்தவும் இந்த முயற்சி முன்மொழியப்பட்டுள்ளது. இந்த தேசிய வாரத்தில் நடைப்பயிற்சி பாதைகளை உருவாக்குதல், சிரமதான பிரசாரங்கள், விளையாட்டு மைதான புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக பிரதேச செயலாளர் மட்டங்களிலும் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.