தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தேர்தலில் ஊழல், பணநாயகமுமே வென்றுள்ளது : வைகோ

vaiko-rnaசட்டப் பேரவைத் தேர்தலில் ஊழல், பணநாயகம் வென்றுள்ளது என மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலருமான வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்தலில் பணநாயகம் வென்றுள்ளது. அதிமுகவும், திமுகவும் பல கோடி ரூபாயை வாரி இறைத்து வாக்குகளைப் பெற்றுள்ளன. இந்த நச்சுச் சுழல் தொடர விடாமல், மக்கள் ஆட்சித் தத்துவம் காக்க உத்வேகத்துடன் தொடர்ந்து போராடுவோம்.
மாற்று அரசியலை முன்னெடுத்துச் செல்ல அச்சாரம்போட்டுள்ள தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி -தமாகா அமைத்த அணியின் வேட்பாளர்களுக்கு வாக்கு அளித்தவர்களுக்கு நன்றி. ஊழல், பணநாயகத்துக்கு எதிராக மக்கள் நலனையும், ஜனநாயகத்தையும் காக்க நாங்கள் அமைத்துள்ள ஆறு கட்சிகளின் கூட்டணி உறுதியுடன், வலுவாக அரசியல் களத்தில் இயங்கும் என்று தெரிவித்துள்ளார்.

Comments
Loading...