Designed by Iniyas LTD
தையிட்டியில் 20 பரப்பில் விகாரை அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது..
தையிட்டியில் 20 பரப்பில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல்லினை , வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நேற்றைய தினம் நடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விகாரை அமைப்பதற்காக ஆவணங்கள் வலி.வடக்கு பிரதேச சபையிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிகப்படுகின்றது.
எனினும் பிரதேச சபை அனுமதி அதற்கு வழங்காத நிலையிலும் விகாரை அமைப்பதற்காக அடிக்கல் நடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.