தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நகை வியாபாரி வீட்டில் கொள்ளை – கள்ளக்குறிச்சியில் சம்பவம்

கள்ளக்குறிச்சியில் நகை வியாபாரி ஒருவர் வீட்டில் இருந்து 25 சவரன் நகை மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.  kalla

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலையில் வசித்து வரும் நகை வியபாரி சதிஷ் என்பவர், கடந்த வெள்ளிகிழமை தனது குடும்பத்தினருடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வெளியூர் சென்று நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார்.

அப்போது  வீட்டின் கதவுகள் உடைக்கப்ட்டு, பீரோவிலிருந்த சுமார் 25 சவரன் நகை மற்றும்  1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.  இது குறித்து கள்ளக்குறிச்சி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments
Loading...