Designed by Iniyas LTD
நந்திக்கடல் பகுதியில் கூட்டுவலைகளைப்பயன்படுத்துவதுவதற்கு முற்றாகத் தடை..
நந்திக்கடல் பகுதியில் கூட்டுவலைகளைப்பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளது.
இத்தகவலை முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தலைவர் ஞா.அன்ரனி தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுகடல் பகுதியான நந்திக்கடல் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த சிறுகடல் பகுதியில் தொழில் செய்வதற்கான விதிமுறைகளைப் பின்பற்றி தொழில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் வெளியிட மற்றும் உள்ளூர் தொழிலாளர்கள் சிலர் சட்டவிரோத கூட்டுவலை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக்கூட்டுவலைகளைப்பயன்படுத்துவதால் இந்த சிறுகடல் பகுதியில் இயற்கையாகவே உற்பத்தியாகும் இறால், மீன், என்பவற்றின் பெருக்கம் அற்றுப்போவதுடன், கடல்வாழ் ஏனைய உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்காரணமாக நந்திக்கடலில் கூட்டுவலைகளைப் பயன்படுத்துவதுவதற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..