தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாட்டினைக் காப்பாற்றிய போர் வீரர்களையே பாதுகாப்போம் – சரத் பொன்சேகா

நாம் யுத்தத்தில் ஈடுபட்டு எமது நாட்டினைக் காப்பாற்றிய போர் வீரர்களையே பாதுகாப்போம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.   மேலும் ,

நாம் எமது நாட்டின் பாதுகாப்பினை முன்னிறுத்தியே செயற்படுவோம். அந்த வகையில் எமது நாட்டினைப் பாதுகாத்த இராணுவ வீரர்களைப் பாதுகாப்பது எமது கடமை என்றும் ,

ஆனால் நாட்டிலுள்ள குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.

அந்த வகையில் குற்றம் இழைத்திருந்தால் முன்னால் கடற்படைத் தளபதிக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும்.

அவர் தனது மேலதிகாரிகளுக்கு விசுவாசமாகச் செயற்பட்டிருந்ததுடன், 12 இளைஞர்களைக் கடத்திக் கொலை செய்வதற்கு உத்தரவிட்டிருந்தால், அவர் மீது சட்டத்துக்கு அமைவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என  சரத்பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...