தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாட்டில் 22 இனவாதக் குழுக்கள்!

thumb_large_srilankaநாடளாவிய ரீதியில் அடிப்படைவாதக் குழுக்கள் 22 செயற்பட்டு வருவதாக புலனாய்வுத்துறை அரசாங்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளது. குறித்த அடிப்படைவாதக் குழுக்கள் நாட்டின் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தின் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மதவாதம், இனவாதம் மற்றும் தனிப்பட்ட தேவைகளை பிரதானப்படுத்தி அடிப்படைவாதக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த அடிப்படைவாதக் குழுக்களின் பின்னணியில் பிரபல அரசியல்வாதிகள் இருப்பதாகவும் அவர்கள் பொருளாதார ரீதியில் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இனவாத, மவாதக் கருத்துக்களை வெளியிட்டு பிரதேசங்களில் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்துவதே அந்த அமைப்புகளின் பிரதான நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அக்குழுக்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஆகவே, அடிப்படைவாதக் குழுக்களின் செயற்பாடு பொதுமக்களுக்கும் பாதகத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு முரணாக அமையுமாயின், அது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Comments
Loading...