தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நான் திருடன் என்றால் கழுத்தறுத்து கொள்வேன் – மகிந்த

அரசாங்கத்தின் உயர்மட்ட ஆட்சியாளர்கள் தான் 18 பில்லியன் டொலர்களை கொள்ளையிட்டுள்ளதாக சில சந்தர்ப்பங்களில் கூறியுள்ளதாகவும் தான் ஒரு டொலரையாவது திருடியதாக நிரூபித்தால் கழுத்தை அறுத்து கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.mahinda-vajra

ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ஜப்பான் டைம்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் இதனை கூறியுள்ளார். அரசியல்வாதிகள் ஒருபோதும் ஓய்வுபெற மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை தனக்கு எதிராக திசை திருப்பியதன் காரணமாகவே தான் 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

Comments
Loading...