தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நான்கு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

thuukkuகாரைநகர் அல்வின் வீதியில் குடும்பஸ்தர் ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான வேலன் முருகேசு ( வயது- 68) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
அவர் உடனடியாக காரைநகர் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு  அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட  வேளையில்  அவர் உயிரிழந்துள்ளார்.
நீதிமன்ற பணிப்புரைக்கு அமைவாக அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் இடம்பெற்ற மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம்  கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த  சம்பவம்  தொடர்பில் ஊர்காவற்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Comments
Loading...