தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாயாறு மீனவர்களால் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒருதொகுதி வலைகள் பொலிசாரிடம் ஒப்படைப்பு…

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு பகுதியில் கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் கடலில் மிதந்துவந்த ஒருதொகுதி வலைகளை மீட்டு கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த வலைகளை முல்லைத்தீவு பொலிசாரிடம் மீனவர்கள் கையளித்துள்ளனர்.

குறித்த வலைகள் அண்மையில் வலைஞர்மடம் பகுதியில் கரையொதுங்கிய இந்திய படகில் இருந்த வலைகளை ஒத்த வலையாக காணப்படுவதாகவும்,

அவை அந்த படகில் இருந்த வலையாக இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...