Designed by Iniyas LTD
வெலிங்டன் விமான நிலையத்தியிலிருந்த இாட்சத கழுகு உருவ கட்டமைப்பு விழுந்தது – பூமியதிர்ச்சி( படங்கள் இணைப்பு )
நியூஸிலாந்தின் வடதீவுப் பிராந்தியத்தை 6.3 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சி திங்கட்கிழமை தாக்கியுள்ளது. இந்த பூமியதிர்ச்சியால் கட்டடங்கள் நடுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்கள் வீடுகளையும் கட்டடங்களையும் விட்டு அலறியடித்துக்கொண்டு வெளியேறி திறந்த வெளிகளிலும் வீதியிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
மாஸ்டரொன் நகரின் வடக்கே 38 கிலோமீற்றர் தூரத்தில் சுமார் 27 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த பூமியதிர்ச்சி தாக்கியுள்ளது.
மேற்படி பூமியதிர்ச்சியால் வெலிங்டன் விமான நிலையத்தியிலிருந்த இாட்சத கழுகு உருவ கட்டமைப்பு கூரையிலிருந்து சரிந்து தரையில் விழுந்துள்ளது.
ஆனால், அதனால் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த பூமியதிர்ச்சியையடுத்து பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன.


