Designed by Iniyas LTD
நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து!
இருபதுக்கு 20 உலகக் கிண்ண முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை அதிரவைத்த இங்கிலாந்து 7 விக்கெட்டுக்களால் மிகவும் இலகுவாக வெற்றிபெற்று உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. சுப்பர் – 10 சுற்றில் அபார வெற்றிகளை ஈட்டி அரையிறுதிக்குள் நுழைந்த நியூஸிலாந்து அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் சரணடைந்தது.
பந்துவீச்சில் பென் ஸ்டோக் ஸும், துடுப்பாட்டத்தில் ஜேசன் ரோய், ஜொஸ் பட்லர் ஆகியோ ரும் இங்கிலாந்தின் அபார வெற்றிக்கு அடிகோலினர். இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்தின் ஆரம்ப வீரர் மார்ட்டின் குப்டில் அதிரடியாக பவுண்ட்ரியுடன் ஆரம்பிக்க டேவிட் வில்லியின் முதலாவது ஓவரில் 17 ஓட்டங்கள் நியூஸிலாந்துக்கு குவிந்தன. மூன்றாவது ஓவரில் குப்டில் ஆட்டமிழந்த பின்னர் அணித் தலைவர் கேன் வில்லியம்சனும் கொலின் முன்ரோவும் இரண்டாவது விக்கெட்டிற்கு 74 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது மொயின் அலியின் பந்துவீச்சில் வில்லியம்சன் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து ஓட்ட வேகத்தை அதிகரிக்க விளைந்த நியூஸிலாந்து வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.
முதல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 89 ஓட்டங்களைப் பெற்றிருந்த நியூஸிலாந்து கடைசி 10 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 64 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அதன்படி நியூஸிலாந்து அதிரடியுடன் ஆரம்பித்தபோதிலும் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பதிலுக்கு ஆடிய இங்கிலாந்து எதிரணியினரின் அதிரடியை விஞ்சும் வகையில் அசுர வேகத்தில் ஓட்டங்களைக் குவித்து 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம்
இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. கோரி அண்டர்சனின் முதலாவது ஓவரில் 16 ஓட்
டங்களைக் குவித்த இங்கிலாந்து 5 ஓவர்கள் நிறை வில் 60 ஓட்டங்களையும் 10 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 98 ஓட்டங்களையும் குவித்திருந்தது. ஆரம்ப விக்கெட்டில் ஹேல்ஸுடன் 82 ஓட்டங்களைப் பகிர்ந்த
ஜேசன் ரோய் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களாக இருந்தபோது சோதியின் பந்துவீச்சில் 78 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.சோதி தனது அடுத்த பந்தில் இங்கிலாந்து அணித் தலைவர் மோர்கனை எல். பி. டபிள்யூ. முறையில் வெளியேற்ற ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜோ ரூட்டும் பட்லரும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி இங்கிலாந் தின் வெற்றியை உறுதி செய்தனர். ரூட் 27 ஓட்டங்களுடனும் பட்லர் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 32 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக் காதிருந்தனர். இவர்கள் இருவரும் வீழ்த்தப்படாத 4ஆவது விக்கெட் டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்த னர். ஆட்டநாயகன் விருது ஜேசன் ரோயுக்கு வழங்கப்பட்டது.