Designed by Iniyas LTD
நீதிமன்றம் விதித்துள்ள தடையினை ஏற்றுக்கொள்கின்றோம் – தினேஸ்
சாலிகா மைதானத்தில் ஒன்றிணைந்த எதிர்க் கட்சியினர் மேதினக் கூட்டத்தை நடாத்துவதற்கு நீதிமன்றம் விதித்துள்ள தடையினை தாம் ஏற்றுக் கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கருத்து தெரிவித்த தினேஸ் குணவர்த்தன, பாரிய மக்கள் கூட்டத்தை நாம் கூட்டுவோம் என தெரிந்தே எமக்கு இவ்வாறான எதிர்ப்புகள், தடைகள் வருகின்றன. ஆனால் பொலிஸ் தரப்பில் இருந்து எந்த வித எதிர்ப்பும் எமக்கு வரவில்லை என அவர் கூறினார்.
நாம் செய்துள்ள ஏற்பாடுகளுக்கமைய மேதினக் கூட்டமானாது சாலிகா மைதானத்தினை தவிர்த்து, பாரிய மக்கள் கூட்டத்துடன் கிருலப்பனை நோக்கிய பேரணியாக நடைபெறும் என இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்