Designed by Iniyas LTD
நேபாள நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 8,635 ஆக அதிகரிப்பு!
நேபாளத்தில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 635 ஆக அதிகரித்துள்ளது. இதில் 89 வெளிநாட்டவர் உட்பட 300 பேரின் உடல்கள் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து பல இடங்களில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
நேபாளத்தில் பல்லாயிரக் கணக்காண உயிர்களை பலிக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு நாளையுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. எனினும் நாட்டின் பல பகுதிகள் நிலநடுக்கத்தின் தாக்கத்தில் இருந்து இதுவரை மீளவில்லை. சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் தாயகம் திரும்பியதால் மறு கட்டமைப்பு பணிகளை துரிதப்படுத்துவதில் நேபாள அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்றளவிலும் அங்கு இயல்பு வாழ்க்கைத் திரும்பவில்லை.