தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நேபாளத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன..

4வது பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று நேபாளத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் நாளை மற்றும் நாளை மறுதினம் பிம்ஸ்டெக் எனப்படும் வங்காள விரிகுடாவின் பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டில் இலங்கை, இந்தியா, மியன்மார், பங்காளதேஷ், நேபாளம் தாய்லாந்து, மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளின் அரச தலைவர்கள்  பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில்  ஜனாதிபதி  அங்கு  எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி நேபாள ஜனாதிபதி  மற்றும் நேபாள பிரதமர் கட்கா பிரசாத் ஒலி ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

அத்துடன் செப்டம்பர் 2ஆம் திகதி காத்மண்டுவிலுள்ள சார்க் செயலகத்திற்கு சென்று , மரக்கன்று நடும் நிகழ்விலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

இதேவேளை  உச்சிமாநாட்டின் நிறைவில், 4வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் ‘சமாதானம், செழுமை மற்றும் நிலையான வங்காள விரிகுடாவை நோக்கி’ என்ற பிரகடனத்தை ஆகஸ்ட் 31ஆந் திகதி உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...