Designed by Iniyas LTD
நைஜீரியாவில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டு தாக்குதலி 82 பேர் பலி
நைஜீரியாவின் கதுனா நகரில் போகோஹாரம் தீவிரவாதிகளால் இன்று நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 82 பொதுமக்கள் பலியாகினர். நைஜீரியாவில் இஸ்லாமிய ஆட்சியை செயல்படுத்தும் நோக்கத்துடன் வன்முறைகளில் ஈடுபட்டு வரும் போகோஹராம் தீவிரவாத அமைப்பு, வெடிகுண்டு தாக்குதல்கள் மூலம் பொதுமக்களை கொன்று குவித்து வருகிறது. குறிப்பாக அவர்களின் கொள்கைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தலைவர்களை குறிவைத்து தொடர்ந்து தாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மிதவாத இஸ்லாமிய மத குருவான தகிரு பவுச்சியை குறிவைத்து கதுனா நகரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 32 பேர் பலியானதாகவும், மதகுரு பவுச்சி காயமின்றி உயிர்தப்பியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அதே போல் காவோ மார்க்கெட் பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு வெடிகுண்டு தாக்குதலில் 50 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.
மே மாதம் குவோசாவை ஆட்சி செய்த சேகு முஸ்தபா இத்ரிஸ் டிம்தா சுட்டுக் கொல்லப்பட்டார். கானோவில் அதிகாரம் செலுத்தி வந்த அல் ஹாஜி அடோ பயெரோ, ஜனவரி 2013ல் தீவிரவாதிகளின் கொலை முயற்சியில் இருந்து உயிர்தப்பியது குறிப்பிடத்தக்கது.