Designed by Iniyas LTD
நொடிப்பொழுதில் உயிர் தப்பிய பிரதமர் ரணில்…
பாரிய விபத்தில் ஒன்றில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நொடி பொழுதில் உயிர் தப்பியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜகிரியவில் மரண வீடு ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மீண்டும் திரும்பும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கமவின் நெருக்கமான உறவினரின் மரண வீட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ராஜகிரிய பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பி வந்து வாகனத்தில் ஏறும் போது , வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை காட்டியுள்ள போதிலும், நிறுத்தாமல் பாதுகாப்பு அதிகாரிகள் மீது மோதியுள்ளார்..
இந்த விபத்தில் இருந்து தெய்வாதீனமாக பிரதமர் தப்பியபோதும் அவரது பாதுகாவலர் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர் அனுமதி பத்திரம் இல்லாத 20 வயதுடைய இளஞர் என்றும், குறித்த நபர் ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.