தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பட்டதாரிகள் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து இன்று காலை 9 மணி முதல் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை அவர்களிற்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,

2019 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கென நிதி ஒதுக்கப்படாமைக்கும் எதிர்ப்புத் தெரிவித்துமே இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...