தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பணத்தை கொள்ளையிட முயன்றவர் மீது அசிட்  வீசிய வர்த்தகர்- கைதடியில் சம்பவம்

வர்த்தகர் ஒருவரை  அச்சுறுத்தி தாக்கி வியாபாரப் பணத்தைக் கொள்ளையிட முயன்றவர் மீது அசிட்  விசிறப்பட்டுள்ளது.

குறித்த  சம்பவம் யாழ்  கைதடிச் சந்தியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில்  நேற்று இடம்பெற்றுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசிட் வீச்சுக்கு இலக்கான குறித்த நபர்   யாழ்.போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த வர்த்தகரும் அசிட் வீச்சினால் காயமடைந்து பொலிஸ் பாதுகாப்புடன் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

பொங்கல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு வர்த்தக நிலையத்தை மூடுவதற்கான ஆயத்தங்கள் செய்தபோது பொருள்கள் வாங்குவது போல வந்த நபர் திடீரெனத் தாக்கிவிட்டு பணத்தை அபகரிக்க முயன்றுள்ளார்.

குறித்த நபர்  தன்னை அச்சுறுத்தியதால் அங்கிருந்த அசிட்டை திருடன் மீது ஊற்றியதாக காயமடைந்த வர்த்தகர் தெரிவித்துள்ளார் .

குறித்த நபரின் கண்ணில் அசிட் பட்ட நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...