Designed by Iniyas LTD
பண்டாரவன்னியன் கைலாயவன்னியன் கிராமங்கள் மக்களிடம் கையளிப்பு..
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவின் வடகாடு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பண்டாரவன்னியன் மாதிரிக்கிராமம் மற்றும் கைலாயவன்னியன் மாதிரிக்கிராமம் ஆகியவற்றின் வீடுகள் மக்களிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவின் வடகாடு பகுதியில் பண்டாரவன்னியன் மாதிரிக்கிராமத்தில் 30 வீடுகளும்,
கைலாயவன்னியன் மாதிரிக்கிராமத்தில் 25 வீடுகளுமாக மொத்தமாக 55 வீடுகள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் ஊடாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தால் அமைக்கப்பட்டது
இவ்வாறு அமைக்கப்பட்ட 132 வது மற்றும் 133 வது மாதிரிக்கிராமங்களின் 55 வீடுகளையும் இன்று காலை வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச மக்களிடம் கையளித்தார்.
அதனை தொடர்ந்து வீடுகளுக்கான ஆவணங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டதோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் வீட்டுக்கடங்களுக்காக விண்ணப்பித்தவர்களுக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் வ கலேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன்,
மற்றும் ஐக்கியதேசிய கட்சி வவுனியா முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர்கள் பிரதேச செயலாளர்கள் பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.








