தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பயங்கரவாத அச்சுறுத்தலை இல்லாமல் செய்ய சர்வதேசத்துடன் இணைந்து செயற்படத் தயார் – இலங்கை பிரதமர்

பயங்கரவாத அச்சுறுத்தலை இல்லாமல் செய்வதற்கு சர்வதேச நாடுகளுடன் ஒன்றிணைந்து செயற்பட இலங்கை தயாராக இருப்பதாக இலங்கை பிராதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாலைதீவு நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சிறப்புரை ஆற்றிய போதே ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாலைதீவு சென்றுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஆரம்பமாகி இரண்டு நாட்கள் நடைபெறும் நான்காவது இந்து சமுத்திர மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார். இந்திய மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்து சமுத்திர மாநாட்டிற்கு மாலைதீவு அரசாங்கம் மற்றும் சிங்கப்பூரில் அமைந்துள்ள சர்வதேச கற்கைகளுக்கான எஸ்.ராஜரட்ணம் நிலையம் ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளது.

பிரதமர் தலைமையிலான இலங்கை குழுவின் வருகை மற்றும் மாநாட்டை முன்னிட்டு அங்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Loading...