Designed by Iniyas LTD
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கும் மகாநாயக்கர்கள் எதிர்ப்பு
தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கும், சிறிலங்காவின் பௌத்த பீடங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் முயற்சிகளை கைவிடுமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்களும், சங்க சபாக்களும் கோரியுள்ளனர்.
கண்டியில் நேற்று நடந்த கூட்டத்தில் இது தொடர்பாக ஆராயப்பட்டிருந்தது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதையும் கைவிடுமாறும் சிறிலங்கா அரசாங்கத்திடம் பௌத்த பீடங்கள் கோரியுள்ளன.
அதேவேளை, சியாம், அமரபுர, ராம்ன்ய பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் கையொப்பங்களுடன் கூடிய, மனுவொன்று சிறிலங்கா அதிபரிடம் நாளை சங்க சபாவைச் சேர்ந்த பௌத்த பிக்குகளால் கையளிப்படவுள்ளது.