தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பயணிகளிற்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள ஶ்ரீலங்கன் விமான நிறுவனம்

வௌிநாடுகளுக்கு பயணிக்க இருப்பவர்கள் பயண நேரத்திற்கு மூன்று மணித்தியாலங்கள் முன்னதாக விமான நிலையத்திற்கு வருகை தர வேண்டும் என  ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று  மதியம் 12.00 மணி முதல் மறுஅறிவித்தல் வரும் வரையில் பயணிகள்   இதனை பின்பற்றுமாறு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அறிக்கை

குறித்த விடயம் தொடர்பில்  ஶ்ரீலங்கன் விமான நிறுவனம்  அறிக்கை ஒன்றையும் வௌியிட்டுள்ளது.

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் சங்கம் நேரத்திற்கு பணியாற்றும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...