தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பறக்கும் படையினரால் வர்த்தகம் பண்ணமுடியாத சூழல் – ஸ்டாலின்

வியாபாரிகள் பாதிக்கப்படாத வகையில் பணபறிமுதல் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் புதிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.  stalin

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், வியாபாரிகள் பொருட்களை வாங்க எடுத்துச் செல்லும் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர், ஆங்காங்கே பறிமுதல் செய்து விடுவதால் வர்த்தகமே நடத்த முடியாத சூழல் ஏற்படுவதாகக் கூறியுள்ளார்.   வியாபாரிகளிடமிருந்து பறிமுதல் செய்த பணத்தை நான்கு நாள்கள் வரை வைத்துக் கொண்டால் அந்த வியாபாரியின் குடும்பமே பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும் ஆபத்து இருப்பதை மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

வியாபாரிகள் வைத்துள்ள பணம் உரிய ஆவணங்களுடன் இருந்தால் அந்தப் பணத்தை உடனே அந்த இடத்திலேயே திருப்பிக் கொடுத்து விட்டுச் செல்லுமாறு பறக்கும் படை அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   அதே நேரத்தில், வியாபாரிகளுக்கு சலுகை வழங்குகிறோம் என்று கூறி பறக்கும்படை அதிகாரிகள் ஆளுங்கட்சியினர் எடுத்துச் செல்லும் பணத்தை கண்டு கொள்ளாமல் இருந்துவிடக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments
Loading...