Designed by Iniyas LTD
பலியான விவசாயிகளுக்கு நிவாரண நிதி அறிவிக்கப்படாதது ஏன்!
முதல்-அமைச்சர் ஜெயலலிதா டெல்டாவில் தொடர்ந்து பலியாகி வரும் விவசாயிகளுக்கு நிவாரண நிதியை ஏன் அறிவிக்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.திருச்சி வந்திருந்த தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் சங்கம் ஓட்டலில் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்வர் தொடர்ந்து பேசுகிறார், உணவு அருந்துகிறார் என யார் யாரோ? கூறுகிறார்கள். ஆனால் விவசாயிகள் பிரச்சனைக்காக முதல்வர் இதுவரை ஏன் அறிக்கை வெளியிடவில்லை. துறையூர் அருகே நடந்த தனியார் வெடிமருந்து ஆலை விபத்தில் பலியானவர்களுக்கு நிவாரண நிதி அறிவித்த முதல்-அமைச்சர் டெல்டாவில் தொடர்ந்து பலியாகி வரும் விவசாயிகளுக்கு நிவாரண நிதியை ஏன் அறிவிக்கவில்லை.
முதல்வரின் உடல் நிலை குறித்து ஊடகங்கள்தான் உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.