Designed by Iniyas LTD
பாக்கிஸ்தான் அரசுக்கெதிராக மக்கள் போராட்டம்!
பாகிஸ்தான் சர்வதேச சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டு வருவதை பாகிஸ்தான் மக்கள் சிறிதும் விரும்பவில்லை. அவர்கள் அரசுக்கு எதிராக திரும்பும் நிலை உருவாகியுள்ளது. பாகிஸ்தானிய மக்கள் அவர்கள் நாட்டில் அரசே தீவிரவாதத்துக்கு கைகொடுப்பதை கடுமையாக எதிர்க்க தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் ஹூசைன் ஹக்கானி கூறுகையில், சர்வதேச அளவில் தீவிரவாதத்தின் இருப்பிடமாக இருக்கும் நிலையை பாகிஸ்தானிய மக்கள் சிறிதும் விரும்பவில்லை. நவாஸ் செரீஃப் மூன்று கோணங்களில் சாமர்த்தியமாக காய் நகர்த்தி அரசியலில் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறார்.
அதாவது,மதம், அரசியல்,ராணுவம் என்ற மூன்றையும் தனக்கு சாதகமான சூழலுக்கு பயன்படுத்திக்கொள்கிறார். இதனால் நல்லாட்சி கிடையாது.மக்கள் இதை சிறிதும் விரும்பவில்லை.
Êசர்வதேச சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படும் நிலையையும் அவர்கள் விரும்பவில்லை. பாகிஸ்தான் ராணுவமும் சேர்ந்து தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.அப்போது தான் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும் என்றார்.