Designed by Iniyas LTD
பிணையில் வெளிய வந்தவர் வெட்டிக்கொலை!
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் ஆஸாத் நகர் மீரா தைக்காப்பள்ளிவாசலில் வைத்து குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (07) காலை 06 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மூதூர் ஸ்ரீ பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 39 வயதுடைய கே.எம்.நாஸ்கீன் என மூதூர் ஸ்ரீ பொலிஸார் கூறியுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த நபர் அவரது மைத்துனரைக் கட்டுத் துவக்கினால் சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு மூன்று மாதத்துக்கு முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையிலையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் வாள்வெட்டில் பலியானவரின் மைத்துனர்கள் 03 பேரைக் கைதுசெய்ததாக பொலிஸார் கூறினர்