Designed by Iniyas LTD
பிரசல்ஸ் விமான நிலையத்தின் ஒரு பகுதி திறப்பு!
பிரசல்ஸ் விமான நிலையத்தின் ஒரு பகுதி மட்டும் திறக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக பெல்ஜியத்தின் பிரசல்ஸ் விமான நிலையம் மூடப்பட்டிருந்தது.
கடந்த 22ம் திகதி முதல் பிரசல்ஸ் விமான நிலையத்தின் பணிகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன.
முதல் கட்டமாக வழங்கி வந்த சேவைகளில் 20 வீத சேவைகளை மட்டும் வழங்க முடியும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரசல்ஸில் இடம்பெற்ற தாக்குதல்களில் 32 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.