Designed by Iniyas LTD
பிரபல கார் நிறுவனம் தனது கார்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளது
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான நிசான், நிறுவனம் தனது நிறுவன கார்களில் ஏர் பேக்குகள் செயல்பாட்டில் சிக்கல் இருப்பதால், 3 லட்சத்துக்கு 53 ஆயிரம் கார்களை திரும்ப பெற முடிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
இவற்றில் பெரும்பாலானாவை அமெரிக்காவில் ஓடும் கார்களாகும். வாகனங்களின் சென்சார்கள் சரிவர இயங்காத காரணத்தால், பயணிகள் பக்க(side) ஏர்பேக் சரிவர செயல்படாமல் இருக்க கூடும் என்பதால், திரும்ப பெறும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கார்களில் முன் இருக்கையின் ஆள் இல்லாத போது அல்லது சிறுவர்கள் இருக்கும் போதோ, விபத்துக்களின் போது ஏர் பேக்குகள் வெளியாவதில் பிரச்சினை இருப்பதாகவும், இதனால் கார்களை திரும்ப பெற முடிவு செய்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் கிட்டதட்ட 3.2 மில்லியன் கார்கள் திரும்ப பெறப்படவுள்ளன.